நச்சுன்னு ஒரு லிப்கிஸ் – புது காதலருடன் தீயாய் பரவும் எமி ஜாக்சனின் போட்டோஸ்.!

இத்தாலி நாட்டிற்கு தனது புது காதலருடன் டேட்டிங் சென்றுள்ள எமி ஜாக்சனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன்.

லண்டனை சேர்ந்த இவர் அதன் பின்னர் விக்ரம் நடித்த ’தாண்டவம்’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்கமகன்’ ரஜினிகாந்த் நடித்த ’2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

எமி லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அண்மையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து எமி ஜாக்சன் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர். இவர் காஸிப் கேர்ள் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் இந்த காதல் ஜோடியினர் தற்போது இத்தாலி நாட்டுக்கு டேட்டிங் சென்றுள்ளனர். அங்கு தனது காதலனுக்கு எமி லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. எமி ஜாக்சன் விரைவில் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!