சமந்தாவின் விவாகரத்து குறித்து தந்தை போட்ட திடீர் பதிவு..!

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.

அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.

சமந்தா – நாக சைதன்யா சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இதுவரைக்கும் நேரடியான கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை.

பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிர கவனமாக இருந்து வந்தனர். இதனிடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதளபக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கதை இருந்தது. மேலும் அது இனி இருக்காது. எனவே, ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், சமந்தா – நாக சைதன்யா ஆகியோரது திருமணம் உள்ளிட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரது பதிவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!