விநாயக சதுர்த்தியன்று 21 வகை இலைகளால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்..?

வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின்பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-

1.முல்லை இலை பலன்:- அறம் வளரும்

2.கரிசலாங்கண்ணி இலை பலன்:- இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.வில்வம் இலை பலன்:- இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல் பலன்:- அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேஷ மானது.

5.இலந்தை இலை பலன்:- கல்வியில் மேன்மையை அடையலாம்.

6.ஊமத்தை இலை பலன்:- பெருந்தன்மை கைவரப்பெறும்.

7.வன்னி இலை பலன்:- பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9.கண்டங்கத்தரி பலன்:- வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10.அரளி இலை பலன்:- எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11.எருக்கம் இலை பலன்: -கருவில்உள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

12.மருதம் இலை பலன்:- மகப்பேறு கிட்டும்.

13.விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணறிவு கைவரப்பெறும்.

14.மாதுளை இலை பலன்:- பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15.தேவதாரு இலை பலன்:- எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16.மருக்கொழுந்து இலை பலன்:- இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்:- உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை பலன்:- சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20.அகத்தி இலை பலன்:- கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்:- நல்ல கணவன்- மனைவி அமையப்பெறும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!