லெஜண்ட் பட நாயகி ரிஷப் பண்ட்டை நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருக்க வைத்தாரா?

பிரபல ஹாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா-வின் சமீபத்திய நேர்காணலுக்கு பிறகு, ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரதேலா இருவருக்கும் இடையே சமூக வலைதளத்தில் பனிப்போர் நிலவி வருகிறது.

பாலிவுட் நடிகை, மாடல் என வலம் வருபவர் ஊர்வசி ரதேலா. இவர் தமிழில் லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் சமீபத்ல் அளித்த பேட்டி ஒன்றில் தன் திரையுலகப் பயணம் பற்றியும் தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனக்கு நிறையபேர் காதல் புரோபோஸ்கள் செய்துள்ளதாகக் கூறிய அவர் தனக்காக பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருந்தார்.தனக்கு நேரம் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை. “நானும் மிஸ்டர் ஆர்.பி இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அதற்காக ஆர்.பி நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தார். எனக்கு வாரணாசியில் சூட்டிங் இருந்ததால், அதை முடித்துவிட்டு நேரடியாக டெல்லி வந்தேன். டெல்லியில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேரிட்டது. இதன் காரணமாக நான் மிகுந்த சோர்வை அடைந்துவிட்டேன். சந்திக்க வருகிறேன் என கூறியதையும் மறந்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டேன்

அவர் 17 முறை எனக்கு போன் செய்தும் எனக்கு தெரியாது. வேறு ஒருவராக இருந்தால் நிச்சயம் இதை உதாசீனப்படுத்தியிருப்பேன். ஆர்பி மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அப்போது அவரிடம் பேசி நீங்கள் மும்பை வந்ததும் சந்திப்போம் என்று கூறினேன். பிறகு அங்கேயும் சந்தித்தோம். ஆனால் அதற்குள் இந்த விஷயங்களும் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

ரிஷப் பண்ட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஆர்பி’ என்று ஊர்வசி குறிப்பிட்டதையடுத்து ரிஷப் பண்ட் குறித்த நெட்சன்களின் பல்வேறு பதிவுகள் வைரலாயின. இந்த நடிகை ரிஷப் பண்ட்டை நீண்ட நேரம் ஓட்டலில் காத்திருக்க வைத்தாரா? என சமூக வலைத்தளத்தில் ஊர்வசி ரவுடேலா கொடுத்த நேர்காணலின் வீடியோ பதிவு வைரல் ஆனது இதற்கு பதிலளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்குப் பிறகு, இன்ஸ்டா ஸ்டோரியில் ரிஷப் பந்த் எழுதினார், ‘மக்கள் பிரபலமாக இருக்கவும், தலைப்புச் செய்திகளில் இருக்கவும் நேர்காணல்களில் பொய் சொல்வது எவ்வளவு அபத்தமானது அல்ல.

பெயருக்காகவும் புகழுக்காகவும் பொய் பேசுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


பின்னர் ரிஷப் பந்த் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரியை 7 நிமிடங்களுக்குப் பிறகு அவர் நீக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதற்குள் மக்கள் இந்த கதையின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தனர். (இன்ஸ்டாகிராம்) இதற்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரதேலா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) நள்ளிரவில், ‘சோட்டு பாய்யா பேட் பந்து விளையாட வேண்டும். யங் கிடோ டார்லிங் தேரே லியே, நான் பிரபலமடைய வேண்டிய அவசியம் அல்ல என கூறி உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!