நயன்தாராவுக்கு திடீர் வாந்தி மயக்கம்.. காரணம் விக்கிதான்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இயக்குனர் அட்லீ இயக்கும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!