விரைவில் ஹன்சிகாவுக்கு டும் டும் டும் – பிரபல அரசியல்வாதி மகனுடன் திருமணம்..?

நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் பிரபல அரசியல்வாதி மகனை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக ‘மஹா’ அண்மையில் வெளியானது. ஹன்சிகாவின் 50 ஆவது படமான இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் 105 மினிட்ஸ் என்ற படம் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கிறது.

இவர் நடிப்பில் 50 ஆவது படமாக வெளியான ‘மஹா’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஹன்சிகா, நடிகர் சிம்பு இருவரும் காதலித்தனர். ஆனால் இவர்களது காதல் தோல்வியில் முடிந்தது. பிரேக்கப்பிற்கு பிறகு சிம்பு, ஹன்சிகா இருவரும் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாட்டை அவரது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!