6 வருடமாக டார்ச்சர் செய்கிறார்… நித்யா மேனன் பகீர் குற்றச்சாட்டு!

நடிகை நித்தியா மேனன் சந்தோஷ் வர்க்கி என்ற இளைஞர் தனக்கு தொடர்ச்சியாக தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்துள்ளவர் நித்யா மேனன். தற்போது தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவர் விரைவில் திரைத்துறையை சார்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நித்யா மேனன். கிட்டத்த்ற 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படம் ஒன்றில் தான் முதல் முறையாக திரையுலகில் அடி எடுத்து வைத்தார் நித்யா மேனன்.
கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது; காரில் 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

இந்நிலையில் தனக்கு திருமணம் என பரவிய வதந்திகளை கடுமையாக மறுத்தார் நித்யா மேனன். இந்த செய்திக்கு காரணமான சந்தோஷ் வர்க்கி என்ற இளைஞர் தான் உண்மையிலேயே நித்யா மேனனை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நித்யா மேனன், “அந்த இளைஞர் எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கிறார். அவர் பேசியது வைரலானதை அடுத்து, தற்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளார். கடந்த 6 வருடங்களாகவே அவர் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். பல்வேறு புதிய எண்களிலிருந்து எனக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார். அப்படி இதுவரை அவரிடமிருந்து எனக்கு வந்த 30 தொலைபேசி எண்களை பிளாக் செய்துளேன்.

அப்படியும் என்னை விடவில்லை. என் அப்பா, அம்மாவிற்கும் போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார். பொதுவாக அவர்கள் யாரிடமும் கோபமாக பேசமாட்டார்கள். ஆனால் அவர்களையும் அந்த இளைஞர் கோபப்படுத்தியுள்ளார். எல்லோரும் போலீசில் புகார் கொடுக்கச் சொன்னார்கள், நான் தான் அவர் ஏதோ சிக்கலில் இருக்கிறார் என்று மன்னித்து விட்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!