ஒரே நாளில் இப்படியொரு அவசர கல்யாணமா.? பிரபல சீரியல் நடிகை பரபர விளக்கம்.!

ஒரே நாளில் முடிவு செய்து தனது திருமணம் அவசர அவசரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார் சீரியல் நடிகை நட்சத்திரா,

ஜீ டிவியில் ஒளிபரப்பான ’யாரடி நீ மோகினி’ என்ற தொலைக்காட்சி தொடரில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் நட்சத்திரா. இவர் தற்போது ’வள்ளி திருமணம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நட்சத்திராவுக்கும் ‘வள்ளி திருமணம்’ சீரியலில் பணிபுரியும் விஸ்வா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்டது. இந்த தகவலை இருவரும் உறுதிப்படுத்தினர்.

இதனிடையில் நட்சத்திராவை விஸ்வா குடும்பத்தினர் டார்ச்சர் செய்வதாகவும், விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலை நட்சத்திராவுக்கும் ஏற்படும் என்று சீரியல் நடிகை ஸ்ரீநிதி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை மறுத்த நட்சத்திரா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இவ்வாறு பேசுவதாக கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் நட்சத்திராவுக்கும், விஸ்வாவுக்கும் அண்மையில் அவசரமாக திருமணம் நடந்து முடிந்தது. இதற்கான காரணம் குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து தற்போது வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ள நட்சத்திரா, ’யாராவது நண்பர்கள் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்களா? என் கல்யாணத்தை பார்த்தாலே தெரியும் ஜாக்கெட் கூட சரியாக ரெடி செய்யவில்லை ரொம்ப சிம்பிளா, பிளைனில் தான் போட்டு இருந்தேன்.

இதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள் அவ்வளவு அவசரமாக, 1 நாளில் முடிவு செய்யப்பட்டு ஒரே நாளில் எல்லா ஏற்பாடு செய்யப்பட்டு இந்த திருமணம் நடைப்பெற்றது. அதற்கு காரணம் என தாத்தா. திடீரென்று அவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை அவருக்காக இந்த திருமணம் அவசர அவசரமாக நடந்தது. அதனால் தான் யாரையும் கூப்பிட முடியவில்லை” எனறு தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!