ரஷ்மிகாவும், விஜய்யும் காதலித்தது உண்மையா..?

விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் தற்போது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்தது குறித்து தெரிய வந்துள்ளது.


விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படம் ஹிட்டானது. மேலும் அந்த ஜோடி இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து டியர் காம்ரேட் படத்திலும் சேர்ந்து நடித்தார்கள்.

விஜய்யும், ரஷ்மிகாவும் காதலிப்பாக பேச்சாக உள்ளது. அதை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் புது தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடான திருமணத்தை நிறுத்திய பிறகு ரஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த காதல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறிந்துவிட்டது. அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை.

காதல் முறிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள். தற்போது விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா இடையே ரொமான்ஸ் இல்லை நட்பு மட்டுமே.

அண்மையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகாவை காதலிக்கிறீர்களா என்று அவரிடம் கரண் ஜோஹர் கேட்டார். அதற்கு விஜய்யோ,

ரஷ்மிகா ஒரு டார்லிங். அவர் எனக்கு நல்ல நண்பர் என்றார். மேலும் மற்றொரு பேட்டியில் ரஷ்மிகா மிகவும் அழகானவர் என தெரிவித்தார் விஜய். இதனால் தான் விஜய்யும், ரஷ்மிகாவும் தற்போதும் காதலிப்பதாக பேசப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!