குடும்பத்துடன் விஷம் குடித்த கோவை ஜோதிடர்… அதிர வைத்த காரணம்!

மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த கோவை ஜோதிடர், குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில், அவரது தாய் இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னா, 41. இவர், ஒரு கட்சியின் ஜோதிடர் அணி பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்தார்.இவருக்கும், சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கருப்பையா, 45, என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் சொத்து தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கருப்பையா, வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, மாங்கல்ய பூஜை நடத்த வேண்டும் என்று ஜோதிடர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இந்நிலையில், 15 சவரன் தாலி சங்கிலி, 25 லட்சம் ரூபாயை வாங்கி, தன்னை மோசடி செய்து விட்டதாக, பிரசன்னா மீது, கருப்பையா போலீசில் புகார் தெரிவித்தார்.விசாரித்த செல்வபுரம் போலீசார், பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்தனர்.

இதில் மனமுடைந்ததாக கூறப்படும் பிரசன்னா, அவரின் தாய் கிருஷ்ணகுமாரி, மனைவி அஸ்வினி, 8 வயது மகள் ஆகியோர், வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு நேற்று விஷம் குடித்தனர்.அருகே இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். சிறுமி, பிரசன்னா, அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!