அவரை பற்றி கேட்டதும் வெட்கத்தில் நெளிந்த நாக சைதன்யா!

நடிகை ஷோபிதா துலிபாலா குறித்து கேள்விக்கு நடிகர் நாக சைதன்யா வெட்கத்தில் நெளிந்துள்ளார்.

நடிகை ஷோபிதா துலிபாலா குறித்து கேள்விக்கு நடிகர் நாக சைதன்யா அளித்துள்ள பதிலும் அவரது ரியாக்ஷனும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

நடிகையுடன் டேட்டிங்

இதனை தொடர்ந்து இருவருமே தங்களது வேலைகளில் கவனம் செலுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும், தான் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் மணிக்கணக்கில் அவருடன் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

லால் சிங் சதா

மேலும் ஷோபிதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றும் நீண்ட நேரம் அவருடன் செலவிடுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த வதந்திகள் பற்றி இருவரும் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர். தற்போது நாக சைதன்யா லால் சிங் சதா படத்தில் ஆமீர் கான் மற்றும் நாக சைதன்யாவுடன் நடித்துள்ளார்.

வதந்தி குறித்து கேள்வி

வரும் 11 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் நாக சைதன்யா ஆர்ஜே சித்தார்த் கண்ணனுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஷோபிதா துலிபாலா உடனான வதந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

வெட்கப்பட்ட நாக சைதன்யா

அதற்கு வெட்கத்தில் சிரித்து மழுப்பியுள்ளார் நாக சைதன்யா. மேலும் நான் சிரிக்கிறேன் என்றும் பதில் அளித்துள்ளார் நாக சைதன்யா. நாக சைதன்யாவின் இந்த ரியாக்ஷன்தான் சினிமா வட்டாரத்தில் ஹாட்டாக உள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் எங்கள் விஷயத்தில் சமந்தாவும் அதை கடந்துவிட்டார், நானும் கடந்து விட்டேன். அதைப்பற்றி உலகிற்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!