இந்த நடிகர் தான் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணமாம்!

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து குறித்து பிரபல விமர்சகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் கலக்கி வருகிறார் சமந்தா.

சமந்தா தற்போது ’குஷி’ படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா.

இந்நிலைகள் பிரபல பாலிவுட் சினிமா விமர்சகர் ஒருவர் சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல் ஆர் கான் என்பவர், சமீபத்தில் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்ததற்கு அமீர்கான் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

மேலும் சமந்தாவை விவாகரத்து செய்ய நாகசைதன்யாவை அமீர்கான் எப்படி வற்புறுத்தினார் என்பது பற்றிய முழு கதையும் தனக்கு கிடைத்துள்ளது. அவர் முழு கருப்பு இதயம் கொண்டவர். விரைவில் முழு கதையும் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். கமல் ஆர் கானின் இந்த பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கான், நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!