ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் என்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்!

ஊட்டிக்கு சுற்றுலா வந்த பெண்என்ஜினீயர் செல்பி எடுத்த போது கல்லட்டி ஆற்றில் தவறி விழுந்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது. அனுமதியின்றி செயல்பட்ட விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பெண் என்ஜினீயர் ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் வினிதா சவுத்ரி (வயது 26). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் வினிதா சவுத்ரி தன்னுடன் பணிபுரியும் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, கல்லட்டியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லட்டி மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் வினிதா சவுத்ரி மற்றும் 9 பேர் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் சென்றதை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றோரத்தில் நின்று வினிதா சவுத்ரி செல்பி எடுத்தார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!