பாலிவுட் நடிகையை திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்!

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் 2023ம் ஆண்டில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


காதல் ஜோடியான நடிகை அதியா ஷெட்டியும், கிரிக்கெட் வீரர் ராகுலும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாவும், பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும் காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு சுனில் ஷெட்டி பச்சைக் கொடி காட்டிவிட்டார். ராகுலும், அதியாவும் ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம்.

ராகுல்

கே.எல். ராகுலுக்கும், அதியாவுக்கும் 3 மாதங்களில் திருமணம் என்று தகவல் வெளியானது. இது குறித்து அதியாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, 3 மாதங்களில் நடக்கும் திருமணத்திற்கு என்னை அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றார். இந்நிலையில் புது தகவல் கிடைத்துள்ளது.

திருமணம்

அதியா ஷெட்டி, ராகுலின் திருமணத்தை 2023ம் ஆண்டின் துவக்கத்தில் நடத்தவிருக்கிறார்களாம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடக்குமாம். தேதி மற்றும் திருமணம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். திருமணத்திற்கு பிறகு மும்பை பாலி ஹில் பகுதியில் இருக்கும் சந்து பேலஸில் அவர்கள் வசிப்பார்களாம்.

காதல்

அதியா ஷெட்டியும், ராகுலும் சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அதியாவின் தம்பி அஹானின் முதல் படமான தடாப் ப்ரீமியரில் தான் அவர்கள் தங்களின் காதலை உறுதி செய்தார்கள். ராகுல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடு செல்லும்போது அதியாவும் உடன் செல்கிறார். அண்மையில் அறுவை சிகிச்சைக்காக ராகுல் ஜெர்மனிக்கு சென்றபோது அவருக்கு துணையாக அதியா சென்றார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!