ஒருதலை காதல்… பிரபல சீரியல் நடிகரின் பரிதாப நிலை.!

சீரியல் நடிகர் ராகவேந்திரா புலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன அழுத்தத்தில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எலாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.


கனா காணும் காலங்கள் தொடரில புலி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து ராகவேந்திரன் விலகவுளளதாக அறிவித்தார்.

நான் 15 நாட்கள் ஷூட்டிங் போனால் 2 அல்லது 3 நாட்கள் தான் சீனில் காணபிக்கிறார்கள். அதுவும் சில நேரங்களில் செட் பொருளாக இருந்திருக்கிறேன். சீரியலுக்கு கூப்பிடும் போது நீங்க தான் எல்லாம் என்று சொல்வார்கள். ஆனால் போக போக நம்ம கேரக்டர் என்ன ஆகும் என்று நமக்கே தெரியும். 2 மாதத்திற்கு முன்பு ஒரு மாத சம்பளம் ரூ 6 ஆயிரம் வாங்கினேன். யோசித்து பாருங்கள் அதை வைத்து எப்படி என் குடும்பத்தை நடத்துவது.

பிச்சைக்காரன் கூட என்னைவிட அதிகமாக சம்பாதிப்பான். நான் ஆரம்பித்த இடத்தில் தான் இருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் ராகவேந்திரன் தற்போது ஒருதலையாக காதலித்த நிலையில் அது தோல்வி ஆனதால் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது பார்ட் டைமில் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறி இருந்த ராகவேந்திரா, “ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடமும் டேமேஜ் ஆகிவிட்டது” என ட்ரிப் போடும் போடோவுடன் பதிவிட்டுள்ளார் ராகவேந்திரா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!