தூக்கத்திலேயே பிரிந்த உயிர்… பிரதாப் போத்தனின் இறுதி நிமிடங்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் நேற்று காலமானார். இந்நிலையில் அவரது இறுதி நிமிடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். 69 வயதான பிரதாப் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ராதிகா

அதேபோல் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 1985ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்த நடிகர் பிரதாப் போத்தன், ஓராண்டிலேயே அவரை விவாகரத்து செய்தார்.

இரண்டாவது திருமணம்

பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்தார் பிரதாப். இந்த தம்பதிக்கு கெயா போத்தன் என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நீண்ட நேரமாகியும்

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்தார் பிரதாப் போத்தன். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பிரதாப் போத்தன் எழுந்திரிக்காததால் அவரது சமையல்காரர் காஃபியுடன் அறைக்கு சென்றுள்ளார்.

சுயநினைவின்றி..

அப்போது சுயநினைவின்றி மெத்தையில் கிடந்துள்ளார் பிரதாப் போத்தன். பிரதாப்பை எழுப்பி பார்த்த சமையல்காரர் முகத்தில் தண்ணீர் தெளித்தும் முயற்சி செய்துள்ளார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லததால், பிரதாப்பின் டிரைவருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

தூக்கத்திலேயே…

பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் அஞ்சலி

அவரது உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று வேளங்காடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!