ஆமாம் லவ் பண்றேன்… விஷாலின் காதலி யார்..?

தான் ஒருவரை காதலிப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அவரின் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலும், வரலட்சுமி சரத்குமாரும் காதலித்தார்கள். அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் முறிந்துவிட்டது.

இதையடுத்து தெலுங்கு நடிகையான அனிஷாவை காதலித்தார் விஷால். காதலை வீட்டில் சொல்ல அவர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள்.

கடந்த 2019ம் ஆண்டு விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த ஆறு மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

திருமணம் நின்று போன பிறகு கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். வயது ஏறிக் கொண்டே போகிறதே ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் விஷயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. விஷால் கூறியிருப்பதாவது,

அப்பா, அம்மா பார்த்து செய்து வைக்கும் திருமணத்துல நான் செட் ஆவேனா என தெரியவில்லை. உங்களிடம் ஏன் பொய் சொல்லணும். ஆமாம், லவ் பண்றேன். அந்த பெண் யார் என்கிற கேள்விக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்து பதில் சொல்கிறேன் என்றார்.


விஷாலின் காதலி யார் என்பது அவரின் நண்பர்களான ரமணா, நந்தாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!