இவ்வளவு எளிமையான மனிதரா தோனி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்!

அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவரிடம் தனது மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபலங்கள் என்றால் பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவதே வாடிக்கை. ஆனால், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் ரூ.40 மட்டுமே செலவு செய்து தனக்கு சிகிச்சை செய்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தோனிக்கு கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆயுர்வேத மருத்துவ முறையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுவருகிறது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும் தோனி, அங்கிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான லாபுங் என்ற கிராமப் பகுதியில் வசிக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவரிடம் தனது மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவரிடம் தோனி சிகிச்சை பெறுகிறார்.

அத்துடன் இந்த சிகிச்சைக்காக அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் தோனி செலுத்திய கட்டணம் ரூ.40 மட்டுமே. பெரும்பாலும் காருக்குள் அமர்ந்தே ஆலோசனை பெற்று மருந்துகளை வாங்கிக்கொள்ளும் தோனி, அருகே வந்த பார்க்கும் சில ரசிகர்களிடம் மட்டும் செல்பி எடுத்துக்கொள்கிறாராம்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!