சருமம், கூந்தல் பிரச்சனைகளில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி!

நோய்களைத் தீர்க்க, கூந்தல் பிரச்சனைகளை நீக்க, சரும பராமரிப்பு என பல்வேறு வகைகளில் பப்பாளி நமக்கு பயன்படுகிறது. இனி சரும பராமரிப்பிற்கு பப்பாளியைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் (Beta carotin) ஆகியவை நிறைந்துள்ளன.

எனவே பப்பாளி பழத்தின் சிறுதுண்டை நன்கு மசித்து, அதனுடன் தயிர் சேர்ந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெண் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.


பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும். பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.


பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

இதேபோல் நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் (Citric Acid) முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் அளிக்கும்.

மசித்த பப்பாளியுடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider Vinegar) மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் ஹேர் பேக்காக (Hair pack) போடவும். ஆப்பிள் சைடர் வினிகர், ஸ்கேல்ப்பின் (Scalp) பிஎச் (pH) அளவை சமன் செய்து, பொடுகுத் தொல்லையைப் போக்குகிறது.

தேங்காய் எண்ணெய் பொடுகால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க உதவுகிறது. பப்பாளி, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டக் கலவையை கூந்தலின் ஸ்கேல்ப்பில் மாஸ்க்காகப் போடவும். இந்த மாஸ்க், கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!