இதனால் தான் கர்ப்பம் பற்றி நான் பேசல – சின்மயி பரபரப்பு பதிவு.!

பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


பிரபல பின்னணி பாடகியான சின்மயி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பாடியுள்ளார். இவரது குரலுக்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அண்மையில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.


சின்மயி கர்ப்பமாக இருந்ததே தெரியாத ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லாததற்கு இதுதான் காரணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி தெரிவித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்மயிக்கு குழந்தை பிறந்ததை ஒருசில நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் அடித்தனர். அந்த வகையில் உங்க இரண்டு குழந்தைகளையும் வைரம், முத்து போல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன் கமெண்ட் அடித்த்திற்கு சின்மயி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் சின்மயி தான் கர்பமாக இருந்ததை சொல்லததிற்கான காரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘நான் குழந்தை பிறந்ததை அறிவித்தவுடன் பல நெட்டிசன்கள் நான் மீடுவில் குறிப்பிட்டிருந்த நபருடன் என்னுடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் பெண்ணியம் பற்றி பேசும் மாநிலம்.

ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் அதிக சாக்கடை குப்பைகள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். அதனால் தான் கர்ப்பமாக இருந்ததை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசவே இல்லை என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!