சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து இருவீட்டார்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நட்சத்திர தம்பதியினருக்கு 15 வயதில் தியா என்கிற பெண் குழந்தையும், 12 வயதில் தேவ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. தியா சென்னையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார், தற்போது நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா பெற்றுள்ள மதிப்பெண்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக தியா படிப்பில் ஆர்வம் உள்ளவர், தற்போது இவர் தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். இதைவிட சிறப்பு என்னவென்றால் பலரும் கடினமானது என கருதும் கணித பாடத்தில் இவர் 100 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

இவ்வளவு மதிப்பெண்களை குவித்துள்ளதை எண்ணி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் உள்ளதோடு, இந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யா அகரம் தொண்டு நிறுவனம் வாயிலாக ஏழ்மையில் இருக்கும் பல குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார், மருத்துவம், பொறியியல், வக்கீல் என குழந்தைகள் விரும்பும் பல படிப்புகளையும் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மகள் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போது சூர்யா விக்ரம் படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ படத்தில் பணியாற்றி வருகிறார். அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்கவிருக்கிறார்.-News & image Credit: zeenews.india * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!