இது தான் வெங்கட் பிரபுவுக்கு முதல் முறை.. வாழ்த்தும் ரசிகர்கள்.!

‘மாநாடு’, ‘மன்மத லீலை’ போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் வெங்கட்பிரபு முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!