விவரிக்க முடியாத உணர்வு… சின்மயி கர்ப்பம் குறித்து பேசிய ராகுல்!

கடந்த 10 மாதங்களாக சின்மயி ஹாலிவுட் நடிகர் அர்னால்டு போல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.


பாடகி சின்மயி இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நிலையில் அவரது கர்ப்பக்காலம் குறித்து பேசியுள்ளார் அவரது கணவர் ராகுல்.

பிரபல பாடகியாக இருப்பவர் சின்மியி ஸ்ரீபடா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் சின்மயி. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

இரட்டை குழந்தைகள்

சின்மயி கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்தார். இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு தானும் தனது கணவரும் பெற்றோர் ஆகியிருப்பதாக குழந்தைகளின் விரலை பற்றியிருக்கும் போட்டோவை ஷேர் செய்தார்.

கர்ப்பமே தெரியவில்லை

இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லையே வாடகை தாய் மூலம் பெற்றீர்களா என கேட்டனர். அதற்கு விளக்கம் கொடுத்த சின்மயி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தான் கர்ப்பமாக இருந்த தகவல் தெரியும் என கூறி வாடகை தாய் மூலம் குழந்தை பெறவில்லை என்பதை உறுதி செய்தார்.

அர்னால்டு போல இருந்தார்

இந்நிலையில் சின்மயின் கர்ப்பக் காலம் குறித்து அவரது கணவரும் நடிகருமான ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “சின்னு அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரைப் போல, கடந்த 10 மாதங்களையும், குறிப்பாக கடந்த சில நாட்களையும் கையாண்டார். இது எங்களுக்கு ஒரு அழகான பயணம்.

விவரிக்க முடியாத உணர்வு

மேலும் சின்னு எங்கள் குழந்தைகளை வளர்ப்பது குறித்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு.சின்மயி மற்றும் டிவின்ஸ் நலமாக உள்ளார்கள். தற்போது என் அம்மா மீதான அன்பு இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.. இவ்வாறு ராகுல் ரவீந்திரன் தான் தந்தையானதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!