விமானம் தரையிறங்கிய போது பற்றியெறிந்த தீ – பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கிய பின் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன், டொமிகன் குடியரசில் இருந்து ரெட் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று 126 பயணிகளுடன் மியாமி சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த தகவல் தொடா்பு கோபுரத்தின் மீது மோதியது.

இதனால் விமானத்தின் வலதுபுற இறக்கை தீப்பிடித்து எாிந்து கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில் விமானத்தில் முன்பகுதி சேதமானது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினா்.

இதனையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு படைவீரா்கள் இரசாயன நுரையை பீய்ச்சி அடித்து எாிந்த கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து காரணமாக மியாமி விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!