இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான பாடகி சின்மயி!

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். த்ரிப்தா – ஷர்வாஸ் 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார் ராகுல் ரவீந்திரன்.

இவர் இயக்கிய மன்மதடு 2 என்ற படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

அந்த குழந்தைகளின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி தன்னுடைய இன்னொரு பதிவில், ‘நான் கர்ப்ப காலத்தின் புகைப்படங்களை இங்கு பகிராததால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டேனா என சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்பவர்களையும் அன்பு செய்கிறேன். என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே இந்தச் செய்தி தெரியும். மேலும் நான் என்னுடைய குடும்பம், நண்பர்கள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையும் இதுவரை பொதுவில் பெரிதாகக் கொண்டு வந்தது இல்லை. அதைப் பற்றி நான் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக இருந்திருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘என் குழந்தைகளின் புகைப்படங்களும் பொதுவில் வராது. என் அறுவை சிகிச்சை சமயத்தின்போது நான், என் இரட்டையர்கள் இந்த உலகத்தில் அடியெடுத்து வைத்தபோது நான் பஜனை பாடினேனா எனவும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். இதை எல்லாம் பற்றி பின்பு நான் சொல்கிறேன். ஆனால், இப்போதைக்கு இந்தத் தகவல்கள் போதும்’ என்று சின்மயி கூறியிருக்கிறார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!