முன்னாள் கணவர் குறித்து சமந்தாவின் வைரல் பதிவு..!

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்த பிறகு தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் சிலர் தான் இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று தனியார் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘ஒரு பெண்ணைப் பற்றி வதந்தி செய்திகள் வெளியானால் அது உண்மையாக இருக்கும் என்றும் அதுவே ஒரு ஆண் பற்றி வெளியானால் அதை ஒரு பெண் தான் செய்திருப்பார் என்றும் நினைக்கிறீர்கள். சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்டவர்களே இதனை கடந்து சென்று விட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!