இந்த மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்… வாட்ஸ்அப் பயனர்களே உஷார்!

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எராளம், அவர்களை குறிவைத்து வாட்ஸ்அப்பில் ஒரு ஊழல் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பான தகவல் இந்தியா டெக் டுடே மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு கே.பி.சி. ஜியோ லக்கி டிரா என்கிற பெயரில் அனுப்பப்படும் மெசேஜில் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கும் போட்டி நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மெசேஜ் உடன் மேற்கண்ட சலுகையில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதும், பணம் சம்பந்தப்பட்ட பயனரின் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது போன்று வரும் மெசேஜ்களுக்கு பயனர்கள் யாரும் பதில் அனுப்ப வேண்டாம் என சைபர் பிரிவு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலியான மெசேஜ் உடன் பிரதமர் மோடியின் புகைப்படம், சோனி லிவ் ஓடிடி தளத்தின் லோகோ உள்ளிட்டவை இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள தகவல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் எழுதப்பட்டு இருக்கிறது. மேலும் இது போன்ற மெசேஜ் ஏதும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு சைபர் பிரிவு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!