காதலை சொல்லும் சேலை… நயன்தாரா திருமண நகைகள் பல கோடியாம்!

நடிகை நயன்தாரா தனது திருமணத்தில் அணிந்திருந்த நகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தனர்.

காதலை சொல்லும் சேலை

திருமணத்தில் நடிகை நயன்தாரா டார்க் ரெட் எம்பிராய்டரி சேலை அணிந்திருந்தார். கைகளாலேயே எம்பிராய்டரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த சேலை மற்றும் பிளவுஸ் விக்கி மற்றும் நயன்தாராவின் காதல் கதையை சொல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்த சுவாரசிய தகவல் வெளியானது.

காண்ட்ராஸ்ட்டாக நகைகள்

இந்நிலையில் நயன்தாரா தனது திருமணத்தில் அணிந்திருந்த நகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவப்பு நிற சேலைக்கு மேட்ச்சாக நகைகள் அணியாமல் காண்ட்ராஸ்ட்டாக பச்சை நிற நகைகளை அணிந்திருந்தார் நயன்தாரா.

வைடூரியம் நெக்லஸ்

நயன்தாரா அணிந்திருந்த நகைகள் அனைத்தும் வைடூரியம், வைரம் மற்றும் மரகத கற்களால் ஆனவை என தெரியவந்துள்ளது. நயன்தாரா கழுத்தை ஒட்டி அணிந்திருந்த நெக்லஸ் சோக்கர் வைடூரியம் மற்றும் போல்கி கற்களால் செய்யப்பட்டதாம்.

7 அடுக்கு வைர மாலை

இரண்டாவதாக அவர் அணிந்திருந்த நெக்லஸ் முழுக்க முழுக்க மரகதத்தால் ஆன ரஷ்யன் மாடலாம். அதற்கு அடுத்தப்படியாக நயன்தாரா அணிந்திருந்த 7 அடுக்கு மாலை வைரம், ரோஸ் கட்ஸ், போல்கி மற்றும் மரகத கற்களால் செய்யப்பட்டதாம். நயன்தாரா அணிந்திருந்த கம்மலும் வைரம் மற்றும் வைடூரிய கற்களால் ஆனதாம்.

மரகத வளையல்

இதேபோல் நயன்தாரா அணிந்திருந்த வளையலும் விலையுயர்ந்த மரகத கல்லால் ஆனதாம். நெத்தி சுட்டி, மோதிரம் என நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த நகைகள் அனைத்துமே வைரம் , வைடூரியம் மற்றும் மரகதத்தால் செய்யப்பட்டதுதானாம்.

பல கோடிகள்

தாலி மட்டும் தான் தங்கத்தில் அணிந்துள்ளார் நயன்தாரா. நயன்தாரா அணிந்திருந்த இந்த நகைகள் இந்திய ரூபாய் மதிப்பில் பல கோடிகளாக இருக்கும் என கூறப்படுகிறது. நயன்தாராவின் ராசிக்கு ஏற்ப வைரம் மற்றும் மரகத நகைகளை அணிந்ததாக தெரிகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!