பாலத்தின் விளிம்பில் புகைப்படம்… ஆற்றில் விழுந்த ஓட்டுனர் பலி!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரிட் சூ பாலத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும், சுற்றுலா பயணி ஒருவரும் கால் இடறி அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர்.

இதில் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்நிலையில், இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும், காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!