காதலரை கரம்பிடித்தார் நியூஸ் ரீடர் கண்மணி… களைக்கட்டிய திருமணம்!

சின்னத்திரை பிரபலங்களான நியூஸ் ரீடர் கண்மணிக்கும் சீரியல் நடிகரான நவீனுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றுள்ளது

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் கண்மணி. இவரது அழகான தமிழ் உச்சரிப்புக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. நியூஸ் ரீடர் கண்மணியும் சீரியல் நடிகரான நவீனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சீரியல் நடிகர் நவீன்

நவீன், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் அறிமுகமானார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் தொடரில் நடித்த வருகிறார். நவீனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இருவருக்கும் காதல்

நவினும் கண்மணியும் காதலித்து வந்த நிலையில் இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

திருமணம்

இந்நிலையில் இன்று நவீனுக்கும் கண்மணிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். முன்னதாக நேற்று மாலை இருவரின் திருமண வரவேற்பு நடைபெற்றது.

ரிசெப்ஷன்

இதில் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். நவீன் – கண்மணி திருமணம் மற்றும் ரிசெப்ஷன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலியான கண்மணியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார் நவீன் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!