தென்ஆப்பிரிக்காவில் தண்ணீருக்காக கலவரமே ஏற்படப் போகும் அபாயம்…!


தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் தற்போது சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தண்ணீருக்காக இங்கு கலவரமே வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இயற்கை வளமான தண்ணீர் சேமிப்பின் அவசியம் கஷ்டம் வரும் வரை புரியாது. அனுபவிக்கும் போதுதான் அது புரிய வரும். தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் அடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள நீர் நிலைகள் தொடர்ந்து நாளுக்கு நாள் வறண்டு வருகின்றன. இதனால் தண்ணீருக்காக மக்கள் அலையாய் அலைகின்றனர். ஏப்ரல் மாதத்துக்கு பிறகு அங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது.

எனவே, ஏப்ரல் 12-ந் தேதியை ‘ஜீரோ’ தினமாக அரசு அறிவித்துள்ளது. தற்போது ரேசன் முறையில் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 50 லிட்டர் வீதம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 12-ந் தேதிக்கு பிறகு தண்ணீருக்காக அரசு என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. தண்ணீருக்காக இங்கு கலவரமே வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

தற்போது கேப்டவுனுக்கு அண்டை நகரங்களில் வாழும் மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு 5 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கி உதவுகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் தண்ணீர் சேமித்து அனுப்பப்படுகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!