கழிவறையில் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் – பின்பக்கத்தில் கடித்த பாம்பு!

கழிவறையில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த மனிதனின் பின் பக்கத்தில் பாம்பு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் 28 வயது இளைஞர் ஒருவர் கழிவறை இருக்கையில் அமர்ந்திருந்தபோது அவரை பாம்பு கடித்தது. ஒரு கூர்மையான கடியை உணர்ந்த அந்த நபர் , ஒரு பாம்பு தனது உடலின் உட்காரும் இடத்தில் பிட்டத்தில் கவ்விப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

உடனே பீதியடைந்த அவர், பாம்பை தூக்கி எறிந்துவிட்டு குளியலறையை விட்டு வெளியேற விரைந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை தொடர்பு கொண்டார். அவர்கள் வந்ததும் பாம்பு பிடிக்கப்பட்டது. இது ஒரு மலைப்பாம்பு என்று கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அது விஷமற்ற ஒன்று.

அதன் பின்னர் மருத்துவமனைக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்றார். பாதிக்கப்பட்ட நபர் இந்த சம்பவத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான தருணம் என்று டுவிட்டரில் விவரித்தார்.

மேலும் இது மார்ச் மாதம் நடந்ததாகவும் தெரிவித்தார். கழிவறையில் இருந்து வெளியே வந்த மலைப்பாம்பின் புகைப்படங்களையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், தனது வீட்டின் கழிவறையை தான் பயன்படுத்தவே இல்லை என்றும், அருகிலிருக்கும் பொது கழிப்பறையை தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், 65 வயது ஆஸ்திரிய நபரின் பிறப்புறுப்பு பகுதியில் பாம்பு ஒன்று கடித்தது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!