அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னிக்கு நேர்ந்த சோகம்… என்னாச்சு..?

அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கருவுற்று இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கரு கலைந்ததாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 40. இவரது முன்னாள் கணவரும் பாடகருமான கெவின் பெடர்லைன் வாயிலாக இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.விவாகரத்துக்கு பின் தனியாக வசித்து வந்த பிரிட்னி ஸ்பியர்சுக்கு நடிகர் சாம் ஆஸ்காரி 28 என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் தான் கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த மாதம் அறிவித்தார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையே பிரிட்னி – சாம் இணைந்து தங்கள் சமூக வலைதளத்தில் கூட்டாக ஒரு அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டனர். அதில் ‘கருவுற்ற சில தினங்களிலேயே கரு கலைந்துவிட்டது’ என அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!