நாளை அட்சய திருதியை: 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்!

அட்சய திருதியை தினமான நாளை 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் குறித்த விபரங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம். அவை:-

  1. அஸ்வினி-கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
  2. பரணி- நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
  3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
  4. ரோகிணி-பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
  5. மிருக சீரிஷம்-சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
  6. திருவாதிரை-தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
  7. புனர்பூசம்-தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
  8. பூசம்-மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
  9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
  10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
  11. பூரம்- நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.
  12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
  13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
  14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
  15. சுவாதி- உளுந்து வடை தானம். வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
  16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
  17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
  18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
  19. மூலம்- கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.
  20. பூராடம்- நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
  21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
  22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
  23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
  24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
  25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
  26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
  27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!