ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?

ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கிரகப்பெயர்ச்சிகளில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிகளுக்குப் பிறகு, அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ராகு-கேது பெயர்ச்சி. இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து, அந்த பலாபலன்களுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கும். ராகு-கேது இரண்டும் ‘நிழல் கிரகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கிச் செல்லும் வழக்கம் கொண்டவை. இந்த ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி 21-3-2022 தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

  • வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால், அவர்களின் அடுத்த தலைமுறைக்கு ராகு-கேது தோஷம் ஏற்படும். இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுவதை தடுக்கும்.
  • ஆலயத்திற்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வாழ்பவர்களின் சந்ததியினருக்கும் இந்த தோஷம் ஏற்படலாம்.
  • நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளுக்குள், ஏதாவது ஒரு பகையின் காரணமாக பிரிவினையை ஏற்படுத்தினால், அந்த நபரின் மூன்றாம் தலைமுறையினருக்கு ராகு-கேது தோஷம் உண்டாகும்.
  • சிறுவர்- சிறுமிகளை, துன்புறுத்தினாலோ, கொடுமைப்படுத்தினாலோ, அந்தப் பிள்ளைகளின் கண்ணீர், துன்புறுத்திய நபரின் அடுத்தடுத்த தலைமுறைகளில் ராகு-கேது தோஷமாக உருவெடுக்கும்.
  • ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரித்து, குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் சாபத்தை வாங்கினால், அந்த நபரின் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து, இல்வாழ்க்கையை நிம்மதி அற்றதாக மாற்றிவிடுவார்கள்.
  • சகோதரர்களை மதிக்காமல், அவர்களின் உண்மை பாசத்தை உதறித் தள்ளுவதோடு, அவர்களை ஏமாற்றினால், அந்த நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜாதகத்தில் சகோதர வீடான 3-ம் இடத்தில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் இடத்தில் கேதுவும் இருந்து தொல்லை தருவார்கள்.
  • நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தல் போன்ற விஷயங்களை முன் ஜென்மத்தில் செய்திருந்தால், அவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது, பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்து தண்டனை வழங்குவார்கள்.
  • வேலை செய்தவர்களுக்கு அதற்கான சரியான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றினாலோ, அல்லது மற்றவர்களுக்கான வேலையை பறித்துக் கொண்டாலோ, அந்த பாவம் சம்பந்தப்பட்ட நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜீவன ஸ்தானத்தில் ராகு-கேதுவாக அமர்ந்து, தொழிலில் முன்னேற்றம் ஏற்படவிடாமல் தடுக்கும்.

இதுபோன்று இன்னும் பல வழிகளில் ஒருவருக்கு ராகு-கேது தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

நாகத் துவாஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹே

தந்நோ ராகு ப்ரசோதயாத்

அச்வ த்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேது ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!