யார் இந்த பிதுஷி..? கமல் பட நடிகையின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்..!

கமல் படத்தில் மர்மமான முறையில் இறந்த நடிகை, நிஜ வாழ்க்கையிலும் அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. யார் அந்த நடிகை? அவரது மரணத்தின் மர்மம் என்ன? பார்க்கலாம்…

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. கமல் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் கமலினி முகர்ஜி, ஜோதிகா இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர். அதே போல இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருடைய மகள் ராணியின் கொலை தான் படத்தின் ஆரம்பமாகவே காட்டப்படும். அதில் அவர் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருப்பார். அவரின் மரணத்தை விசாரிப்பதாக கதை செல்லும்..

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ராணியின் இறப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 1989 ஆம் ஆண்டு ஒரிசாவில் பிறந்த இவரது பெயர் Bidushi Dash Barde. சிறு வயது முதலே மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர் பல்வேறு அழகி போட்டியில் பங்கேற்று இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்து இருக்கிறார். அதன் பின்னரே இவருக்கு கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது.

அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், 2009 ஆம் ஆண்டு கேதர் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் கழித்து இவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்து உள்ளார்கள். இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லாத நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அலுவலகம் சென்று திரும்பிய கேதர் தன்னுடைய மனைவி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து நடிகையின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர். பிதுஷியின் முகம் மற்றும் தலையில் அடிபட்டு இருந்ததால் இது முதலில் கொலை என்ற கோணத்திலேயே விசாரித்து இருக்கின்றனர். அக்கம் பக்கத்தினரிடன் விசாரிக்கையில் பிதுஷி இறந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்து ஒருவர் வெளியில் சென்றார் என்று கூறி இருக்கிறார்கள், இதனால் இது நிச்சயம் கொலையாக தான் இருக்கும் என்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த வழக்கு இப்படியே சென்றுகொண்டு இருக்க பிதுஷின் கணவரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மனைவிக்கு சக்கரை நோய் இருந்ததால் அடிக்கடி அவள் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள். அதற்கான மருந்துகளையும் எடுத்துவந்தார் என்றும் கூறி இருந்தார். அதே போல முன்னாள் விமானப்படை வீரரான பிதுஷியின் தந்தை சாந்தனுவிடம் போலீஸ் விசாரித்த பொழுது, அவரும் தன் மகளுக்கு 16 வயதில் இருந்தே சக்கரை நோய் இருக்கிறது என்றும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் பிதுஷி , சக்கரை நோய் காரணமாக மயக்கம் அடைந்து நிலை தடுமாறி விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டு இறந்து இருக்கலாம். எனவே, இது கொலை அல்ல எதிர்பாராத விபத்து தான் என்று போலீசார் வழக்கை முடித்து விட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவரது மரணம் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் இல்லை என்றே கூறப்படுகின்றது.-News & image Credit: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!