கார் டிரைவராக பணியாற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி மந்திரி!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதி மந்திரி தற்போது உபேர் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் நிதி மந்திரியாக செயல்பட்டவர் காலித் பயெண்டா. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இவர் நாட்டின் நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் இவர் தற்போது இப்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள உபேர் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “நான் ஆறு மணி நேர வேலைக்கு தினமும் 150 டாலர்கள் வரை சம்பாதிக்கிறேன். என்னால் இயன்ற விதத்தில் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உழைக்கிறேன்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்பட்டதால் தான் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம்” என தெரிவித்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி