‘போதும் போதும்’ ஸ்மார்ட்போனிலிருந்து விடுபட உதவும் ஆப்..!

நாள் ஒன்றிற்கு இத்தனை மணி நேரத்தில் இருந்து, இத்தனை மணி நேரம்வரைதான் நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுக்கவைக்கும்.

காலையில் கண் விழித்தது முதல், இரவு தூக்கம் வரும் வரை ஸ்மார்ட்போனே கதி என கிடக்கிறோம். அதிலிருந்து மீண்டு வர, ஒரு அப்ளிகேஷன் வழிகாட்டுகிறது. ‘பிரேக் ப்ரீ’ என்ற அந்த அப்ளிகேஷனை உங்கள் போனில் டவுன்லோடு செய்தால் போதும். உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உதவும்.

அழைப்புகள், மெசேஜ், படம், வீடியோ, ஆடியோ, வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வெப்சைட்டுகள்… என அத்தனை அத்தியாயங்களும் கையடக்க மொபைலில் இருக்கும்போது, அதை ஒரு நாளைக்கு எத்தனை முறை நீங்கள் பார்க்கிறீர்கள்? 50, 100, 150? இப்படி எண்ணவே முடியாத கணக்கை கடந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் கட்டுப்படுத்துவதுதான், இந்த ‘பிரேக் ப்ரீ’ அப்ளிகேஷனின் முக்கிய வேலை.

நீண்டநேரமாக சமூக வலைத்தளத்தில் உலாவிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், ‘போதும் போதும்’ என குரல் கொடுக்கும். நாள் ஒன்றிற்கு இத்தனை மணி நேரத்தில் இருந்து, இத்தனை மணி நேரம்வரைதான் நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுக்கவைக்கும்.

குடும்பத்தோடு, நண்பர்களோடு வெளியே செல்லத் திட்டமிடுகிறீர்கள் எனில், அந்த நேரத்தில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள ‘வலை’களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, நோட்டிபிகேஷன்களைத் துண்டிக்கும். இதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறீங்களா? பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

அடிக்கடி மொபைலையே பார்த்துக்கொண்டிருப்பதால், மனைவியிடம் வாங்கும் திட்டு குறையும். ‘சார்ஜ் நிற்கவில்லை’ என நீங்கள் புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கொஞ்சமாவது குறையும். அனிச்சையாக அடிக்கடி மொபைலை தடவும் பழக்கத்தை நிச்சயம் கைவிடலாம். பொய் சொல்லும் வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பதால், இனி நிஜமாகவே ‘நீ கால் பண்ணியதைக் கவனிக்கலை மச்சி. இப்போதான் எடுத்துப் பார்த்தேன்’னு உண்மையைப் பேசலாம். இப்படியாக, மொபைல் போனே கதி என கிடக்காமல், வாழ்க்கையைக் கொஞ்சமாவது வாழ்ந்து பாருங்க என அறிவுரை சொல்கிறது இந்த அப்ளிகேஷன்!- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!