நடிகை சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடுக் திருப்பம்!

பிரபல நடிகை சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அவரது கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
திடீர் மாயம்

பிரபல வங்கதேச நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு. 45 வயதான இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு டிவி சீரியல்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரைமா திடீரென மாயமானார்.

சாக்கு மூட்டைகளில் உடல்

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத்பூர் பாலம் அருகே ரைமாவின் உடல் இரண்டு சாக்கு மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காட்டிக்கொடுத்த கயிறு

இந்நிலையில் தொடர்பாக விசாரித்த போலீசார் ரைமா உடல்பாகங்கள் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட

கயிறு அவரது கணவரான ஷெகாவத்தின் காரில் இருப்பதை பார்த்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் ஷெகாவத்.

மனைவிக்கு கள்ளத்தொடர்பு

தற்போது மூன்று நாட்கள் காவலில் உள்ள ஷகாவத் ஹுசைன் நோபல், மனைவியை கொன்றது எப்படி? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு டிவி சேனல் அதிகாரி ஒருவருடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து ஷெகாவத் பல முறை கண்டித்தும் ரைமா தனது தொடர்பை துண்டிக்கவில்லை என தெகிறது.

கழுத்தை நெரித்து கொலை

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி காலை இந்த விவகாரம் தொடர்பாக ரைமாவுக்கும் ஷெகாவத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஷெகாவத் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தனது நண்பர் ஃபர்ஹாத்தின் உதவியை நாடியுள்ளார் ஷெகாவத்.

துண்டு துண்டாக வெட்டி

பின்னர் இருவரும் சேர்ந்த ரைமாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை இரண்டு சாக்கு மூட்டையில் கட்டி தங்களின் காரில் வைத்து கடத்தியுள்ளனர். மிர்பூர் அருகே சாக்கு மூட்டைகளை வீச திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே வீசியுள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள்

மனைவியை ஷெகாவத் ஹுசைன் கொலை செய்த போது அவரது இரண்டு பிள்ளைகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாக கூறியுள்ளார். இதையடுத்து ஷெகாவத்தின் நண்பர் ஃபர்ஹாதுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளத் தொடர்பால் நடிகை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!