மொபைல் மூலம் தகவல் கொடுத்த பெண்… பிடிபட்ட நைட்டி திருடன்!

கேரள கோட்டயம் மாவட்டம் தலையோலப்பரம்பு அருகே நள்ளிரவு வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை மொபைல் மூலம் கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்து கைது செய்த பெண்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், தலையோலப்பரம்பு அருகே உள்ள வெல்லூர், கீழூர் அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாத்தியூ (54) அவருடைய மனைவி சூசாம்மா (50) இவர்களுடைய மகள் சோனா அவர் தற்போது திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார்.

வீட்டில் வயதான தனது தாய் தந்தையர் இருந்ப்பதால் சோனா தனது வீட்டில் ஒரு சுற்று கேமராக்களை வைத்து இடையிடையே வீட்டை தனது மொபைல் போன் மூலம் கண்காணித்து வந்தார்.

அதுபோல் நேற்று மொபைல் போன் ம்மூலம் கண்காணித்தார். அப்போது வீட்டின் மாடி பகுதியைப் பார்த்த போது நைட்டி அணிந்த ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. அவர் திருடன் என்று சந்தேகித்து உடனடியாக இவர் தலயோலப்பரம்பு காவல் நிலைய எஸ்.ஐ ஜெய் மோனை மொபைல் பேசியில் அழைத்து விவரம் தெரிவித்தார்.

இது தனது காவல் நிலைய எல்லைக்குள் அப்பகுதி வராவிட்டாலும், அவர் குறிப்பிட்ட பகுதி வெள்ளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும் என்பதை அறிந்து உடனே அவர் வெள்ளூர் காவல் நிலைய எஸ். ஐ. கே.சஜியிடம் உடன் தகவல் தெரிவித்தார்.

பின்னர் இரு காவல் நிலையங்களிலும் இருந்து போலீசார் ஜீப்பில் புறப்பட்டு சோனா வீட்டிற்கு சென்று, வீட்டை சுற்றி வளைத்து மாடியில் பதுங்கியிருந்த திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திருடன் கோட்டயம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவனும் தற்போது வாடகைக்கு ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது. பெயர் ராபின்சன் (32 வயது ) என்பதும் வெளியானது .

இவன் பிரபல கிரிமினல் என்றும், பகல் நேரங்களில் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் இதுபோல வீடுகளின் மாடியில் பதுங்கியிருந்து நள்ளிரவு வீட்டில் இருக்கும் முதியவர்கள் உறங்கும் போது அவர்களை தாக்கி பணம் நகை கொள்ளை அடிப்பது பழக்கம் என்று தெரிகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!