தைப்பூச திருவிழாவில் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

திருச்செங்கோட்டில் தைப்பூச திருவிழாவில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பருத்திப்பள்ளி நாடார் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர்(வயது27). அதே பகுதியை சேர்ந்தவர் கோபி(23). உமாசங்கர் சங்ககிரி லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார்.

உமாசங்கரும், கோபியும் பருத்தி பள்ளி பகுதியில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நடந்த சுத்து பொங்கல் நிகழ்ச்சியில் நடந்த விளையாட்டு போட்டியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த கோபிக்கும், உமாசங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆதிரமடைந்த கோபி உமாசங்கரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த உமாசங்கர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து கோபியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்துபோன உமாசங்கருக்கு திருமணமாகி சிவா அம்பிகை என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு தான் ஆகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!