கர்ப்ப காலத்தில் வரும் கால் வீக்கத்திற்கு என்ன காரணம்?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.


பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத் தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அடைதல் ஆகும்.

இது மாதிரி ஏற்படும் கால் வீக்கத்தை (Swollen feet during pregnancy) எப்படி சில எளிய வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எப்படி சரிசெய்து கொள்ளலாமென பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் உடல் அமைப்பு மிகவும் நுணக்கமானது. அவள் தாய்மை நிலைமையை எய்தியவுடன், அதாவது அவளது கருவறையில் ஒரு சிசு வளரத் தொடங்கியவுடன் அவளது உடல் இயக்க நிலைகளில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்கின்றன.

இது பொதுவாக எல்லோருக்கும் நடப்பதே. இதுவரை அவளது உடல் செயல்பாட்டிற்கு மட்டுமே சுரந்து கொண்டிருந்த சுரப்பிகள் மற்றும் உற்பத்தியாகிக் கொண்டிருந்த இரத்த அளவுகள் என்று எல்லாமே மாறத் தொடங்கி விடும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கான மைய காரணமே கருவில் வளரும் சிசு! ஆம்! கருவில் உள்ள குழந்தைக்கு எல்லா சத்துக்களும் சென்று சேர வேண்டும்.

அப்போது கரு சிறந்த முறையில் வளர்ச்சி அடைந்து முழு நிலையை எய்தும். இப்போது கால் வீக்கத்திற்கு வருவோம்!

பொதுவாக ஒரு பெண்ணின் உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவிலிருந்து 50% அதிக அளவு இரத்தம் கர்ப்ப காலத்தில் உற்பத்தி ஆகின்றது. இது தவிர உடலில் சுரக்கும் பல்வேறு திரவங்களின் (body fluids) அளவுகள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. இதன் காரண மாகவே கர்ப்பிணிப் பெண்களின் கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுகின்றது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதையும் அறியலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த எடை அதிகரிப்பாலும் கால் வீக்கம் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில், எப்போது கால் வீக்கம் ஏற்படுகிறது?

கால் வீக்கமானது கர்ப்ப காலத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது கருத்தரித்த ஆரம்ப நாட்களிலிருந்து குழந்தை பிறக்கும் காலம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த வீக்கம் வரலாம்.

எனினும் அதிக பட்சமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பிரச்சினையை தங்கள் ஐந்தாம் மாத கர்ப்ப காலத்தில் சந்திக்கத் தொடங்குகின்றனர். கடைசி ட்ரைமெஸ்டரில் (3-ஆம்) இந்த வீக்கத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. இந்த வீக்கமும் ஒரே அளவில் இருக்காது. சில சமயம் அதிகமாக இருக்கும் சில சமயம் மிகவும் குறைவாக இருக்கும். இதை மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கின்றார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!