கொழுந்தியாள் போட்ட ட்வீட்.. ரஜினி வீட்டில் புயல்!

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்தியின் இன்னும் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த ஹாட் நியூஸ் கிளம்பி விட்டது.. சிம்புவிற்கு சௌந்தர்யா சொன்ன வாழ்த்து செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி கொண்டு எரிகிறது

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சரி, சிம்புவும் சரி ஒன்றாகவே ஸ்கூல் படித்தவர்கள்.. காலேஜும் ஒன்றாகவே படித்தவர்கள்.. அப்போதிருந்தே இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வந்தன..

டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு நடித்ததில் இருந்து ஐஸ்வர்யாவுடன் காதல் என்ற செய்தி வலுவாகி கொண்டிருந்தது.

ஹாட்ரிக்

ஆனால், அந்த கால கட்டத்தில் தொடர்ந்து சிம்பு நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்தது.. மற்றொருபுறம் தனுஷ் நடித்த முதல் மூன்று படங்கள் மிக பெரிய ஹாட்ரிக் வெற்றியை அடைந்தது.. இதனால், சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் வளர்ந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.. ஒவ்வொரு செயலிலும் சிம்புவுடன் தனுஷை ஒப்பிட்டு பார்ப்பதும் தானாகவே அமைந்துவிட்டது.

மன்மதன்

இந்த சமயத்தில், தன்னை விட வயதில் மூத்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.. இந்த திருமணத்திற்கு பிறகு, ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்வது போன்ற மன்மதன் கதையை சிம்பு எடுத்து அவரே இயக்கியும் நடித்திருந்தார்.. அப்போதும் தனுஷ் – சிம்பு இடையேயான போட்டிதான் வெளிப்பட்டது. சிம்புவும், தனுஷும் ஆளுக்கு ஒரு பக்கம் தங்கள் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், இவர்களிடையேயான தொழில் போட்டியை அவர்களது ரசிகர்கள் மறக்காமலேயே உள்ளனர்.

போட்டோக்கள்

இந்நிலையில், சிம்புவிற்கு பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனைக்காக டாக்டர் பட்டத்தை கடந்த வாரம் வழங்கியிருந்தது.. அந்த விழாவில் எடுத்த போட்டோக்களை நடிகர் சிம்பு இணையதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அதற்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர்.. அந்த வகையில், ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவும் வாழ்த்து சொல்லி இருந்தார்.. இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்றும் ஒருவேளை அப்படி இருக்குமோ என்றும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

ரஜினி வீடு

செளந்தர்யா வாழ்த்து சொன்னதுதான் ரஜினி வீட்டில் வீசிய புயலுக்கு காரணம் என்றும், கொழுந்தியார் வாழ்த்து சொன்ன நிலையில்தான், தனுஷ் இப்படி விவாகரத்து முடிவு எடுத்து விட்டார் என்றும் ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.. ஒருவேளை இதுதான் காரணம் என்றால், அது “சின்னப்பிள்ளைத்தனமான” முடிவு என்கிறார்கள் ரசிகர்கள்.. சிம்புவுக்கு செளந்தர்யா வாழ்த்து சொன்னால், அதற்கு ஐஸ்வர்யா எப்படி பொறுப்பாக முடியும் என்றும்? குழந்தையில் இருந்து பார்த்து பழகிய சக நண்பருக்கு சௌந்தர்யா வாழ்த்து சொல்ல கூடாதா? கேள்வி எழுப்புகிறார்கள்.

பரபரப்பு

படித்த பட்டம் பெற்ற சௌந்தர்யாவுக்கு, சிம்புவுக்கு வாழ்த்து சொல்ல உரிமை கிடையாதா? அந்த உரிமையை அக்கா புருஷன் எப்படி கட்டுப்படுத்தலாம்? ஒருவேளை சிம்புவுக்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருந்தால், தனுஷ் என்ன செய்திருப்பார்? என்றும் அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார்கள்.. அதேசமயம், செளந்தர்யா, சிம்புவுக்கு வாழ்த்து சொன்னதை, ஒரு சாக்காக தனுஷ் எடுத்து கொண்டுவிட்டதாகவே கூறுகிறார்கள்.. உண்மையிலேயே தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. ஆனாலும், சௌந்தர்யா அன்று போட்ட ட்வீட், இன்று புயலை வீசிவிட்டது என்றே முணுமுணுப்பு எழுந்து வருகிறது.- source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!