தீரும் பிரச்சனைகளும்… கடுகு எண்ணெய் பரிகாரமும்!

பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கடுகு எண்ணெய் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். எந்த பிரச்சனைக்கு கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்…

கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நிலம் மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணெயில் மாதம் ஒரு முறை உடல் முழுவதும் தடவி குளிக்க நன்மை பெருகும்.

மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் ஆண்கள், பெண்களும் இப்படி செய்யலாம்.

ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி “ஓம் பைரவாய நமஹ” மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணெயை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும்.

வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!