கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை – டோங்காவை தாக்கிய சுனாமி!

கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டாங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டங்கா என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது.

இந்நிலையில், அந்த தீவில் உள்ள எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது.

சுனாமி அலைகள் டாங்கா தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!