இந்தியாவில் 17 லட்சம் அக்கவுண்ட்களை நீக்கிய வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சுமார் 17 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் நவம்பர் 2021 மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 17 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் 20 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 படி வாட்ஸ்அப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்திய விதிகள் மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி 2021 நவம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வந்த 17,59,000 பேரின் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 602 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதில் வாட்ஸ்அப் 36 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று 357 அக்கவுண்ட்களை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டன. அவற்றில் 36 அக்கவுண்ட்கள் ‘ஆக்‌ஷன்’ செய்யப்பட்டன.

அக்கவுண்ட் ஏற்கனவே நீக்கப்பட்டு இருத்தல் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட அக்கவுண்ட் ரீஸ்டோர் செய்யப்பட்டு இருத்தலை வாட்ஸ்அப் ‘ஆக்‌ஷன்’ என குறிப்பிடுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!