2018 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள ஐபோன் இப்படித்தான் இருக்குமாம்! காரணம் என்ன.?


ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடவுள்ள ஐபோன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன் பேட்டரி வடிவத்தை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2018-ல் வெளியாகும் ஐபோன்களில் L வடிவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. முழுமையாக வளையும் தன்மை கொண்ட L வடிவிலான பேட்டரிகளை தனது புதிய ஐபோன் X மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் புதிய ஐபோனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஐபோன் X மாடலில் இரண்டு செவ்வக பேட்டரிகளை L வடிவில் வழங்கி இருக்கிறது.


2018 ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருக்கும் 6.45 இன்ச் ஸ்கிரீன்களை எல்.ஜி. நிறுவனம் விநியோகம் செய்யலாம் என தெரிகிறது. மேலும், எல்ஜி செம் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் L வடிவிலான பேட்டரிகளை தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய எல்ஜி தயாரிப்பு ஆலையில் ஐபோன்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.-
Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!