ரூ.50 கோடி கணவரிடம் பறிப்பு..? விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தாவை மோசமாக விமர்சனம் செய்த நபருக்கு அவர் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில் தாங்கள் பிரிவதாக கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அறிவித்தனர். திருமண பந்தம் முடிந்தாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என சமந்தாவும், நாக சைதன்யாவும் அறிக்கை வெளியிட்டனர்.

விவாகரத்துக்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க சமந்தா தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழலில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூகவலை தளங்களில் பலர் தரக்குறைவான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுபோன்ற சமூக வலைதள நபர் ஒருவர் நடிகை சமந்தாவை ‘டேக்’ செய்து, “விவகாரத்து பெற்ற, இரண்டாம் தரமானவர், ஒரு ஜென்டில்மேனிடமிருந்து 50 கோடி ரூபாயை வரியில்லாமல் பெற்றவர்” என ‘டிரோல்’ செய்திருந்தார்.

அந்த வலைதள நபரின் டுவீட்டை ரிடுவீட் செய்த நடிகை சமந்தா, “கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்திருந்தார். நடிகை சமந்தாவின் இந்த ரிடுவீட்டைத் தொடர்ந்து, அந்த சமூக வலைதள கணக்கு வைத்திருந்த நபர் உடனடியாக தன்னுடைய கணக்கை டெலிட் செய்துவிட்டார். .

முன்னதாக நாகர்ஜுனா குடும்பத்தார் சமந்தாவுக்கு பெரும் தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க முன் வந்தபோதும், தான் நன்கு வேலை பார்த்து சம்பாதிப்பதாகவும், உங்கள் பணத்தில் ஒரு பைசா கூட வேண்டாம் என்று நடிகை சமந்தா தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனிடையே விவாகரத்திற்காக மட்டும் அல்லாமல் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டதற்காகவும் சமூக வலைதளங்களில், சமந்தாவை வலைதள வாசிகள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!