புஷ்பா படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட இவர் தான் காரணமா..?

புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட சமந்தா ஒப்புக் கொண்டதற்கு யார் காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.


ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட யார் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த புஷ்பா படம் டிசம்பர் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் ரிலீஸான வேகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா. அதற்காக அவரை சிலர் பாராட்டினாலும், சிலர் விளாசியுள்ளனர்.

ஊ சொல்றியா பாடலுக்கு டான்ஸ் ஆடியது சுலபமாக இல்லை என்று சமந்தா தெரிவித்தார். இந்நிலையில் சமந்தா பற்றி இயக்குநர் சுகுமார் கூறியிருப்பதாவது, ஊ சொல்றியா பாடலுக்கு டான்ஸ் ஆட முதலில் மறுத்துவிட்டார் சமந்தா. நான் தான் அவரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தேன். சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதை எடுத்துக்காட்டாக சொன்னேன் என்றார்.

தன் முன்னாள் கணவரான நாக சைதன்யா குடும்பத்தாரை பழி வாங்கத் தான் சமந்தா இப்படி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. சமந்தா இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி ஆடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் சமந்தாவின் பாடலை பார்க்கவே தியேட்டருக்கு பலர் செல்கிறார்கள்.

நான் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார். ஆனால் என் குடும்பத்தாரை அசிங்கப்படுத்தும் வகையில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்று நாக சைதன்யா அண்மையில் தெரிவித்தார். அவர் சமந்தாவை தான் குத்திக்காட்டி பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!