மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் வழிகள்!

யோகா செய்வது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.


அக்குபிரசர் – உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

மாதுளை – இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது

யோகா – இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.

அன்னாசி பழம் – மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

இஞ்சி டீ – இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்.

கற்றாழை – இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

பெருஞ்சீரகம் – ஆண்டிஸ்பாஸ்மோடிக் பணபுகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது.

லவங்கப்பட்டை – இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது.

வெந்தயம் – இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது.

பேரீச்சை – இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன.

விளக்கெண்ணெய் – இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.

பின்பற்ற வேண்டியவை

  • தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
  • தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள்
  • காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்
  • வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்
  • அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!